Jet tamil
சினிமா

தளபதி66-க்கு தெலுங்கு நிறுவனத்திடம் 10 கோடி அட்வான்ஸ்!

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி விஜய் கால்ஷீட் தருவார் என நம்பி ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கிய நிலையில் தற்போது விஜய் தளபதி 66 படத்திற்காக வேறு ஒரு நிறுவனத்திடம் விலை போய் விட்டாராம்.

தளபதி விஜய் என்றாலே வசூல் மழை தான் என்பதை போல இருக்கிறது அவரது சமீபத்திய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்கள். இவ்வளவு ஏன் 1008 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியான மாஸ்டர் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த தைரியம் தான் தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் தயாரிக்க உந்துகோலாக அமைகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தளபதி 65 படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் தளபதி 66 படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டாராம்.

அந்த வகையில் முன்னதாக தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது விஜய்யின் தளபதி 66 படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக மைத்திரி மூவி மேக்கர்ஸ். இதற்காக விஜய் 10 கோடி அட்வான்ஸ் வாங்கி விட்டதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே ஊரடங்கு சமயத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேரடி தெலுங்கு படம் ஒன்றுக்காக லோகேஷ் கனகராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஓகே பண்ணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டுமென கடா வெட்டி விருந்து

jettamil

வடமராட்சி மண்ணில் இசைக்குயில் கில்மிசாவுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா

jettamil

கில்மிஷா,அசானி இருவரும் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

jettamil

இலங்கையில் ஆரம்பமான நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

Sinthu

நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்..!

Sinthu

தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்

Sinthu

Leave a Comment