கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த விஜயகாந்திற்கு இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே அவரை அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவரது கட்சி சார்பில் வந்த அறிக்கையில் வழக்கமான சிகிச்சைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளனர்.