யாழ்ப்பாணம் – நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிட்டுப்பூங்கா தீ பற்றி எரிவதனை கண்ட அப்பிரதேச மக்கள் யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
எனிலும் அவர்கள் வேறொரு பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்தமையால், நல்லூர் முத்திரை சந்திக்கு வருவதற்கு தாமதமாகியுள்ளது.
அதனால் கிட்டுப்பூங்காவின் முகப்பு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.