நாட்டில் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகைகளை வழங்ககோரி எதிர்க்கட்சி அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இந்த கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன் எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே பொது மக்களின் சுமையைத் தணித்ததாகவும்,
ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் சலுகைகளை வழங்கியதாகவும் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.
எனவே பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.