நாளை முதல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கவுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வீட்டு எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் வெளியிடுமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு அமைவாகவே லிட்ரோ நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு இணங்கி சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளை முதல் விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.