நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது அவசர தேவைகளுக்காக நுண்கடன்களை பெற்றுக்கொண்ட மக்களில் அதனை மீளவும் செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் வரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிங்கள தொலைக்காட்சி யூடியூப் வலைத்தளத்தின் ஊடாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த நுண்கடன் திடடத்தின் ஊடக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த அதிகளவிலான பெண்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.