பதுளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினம் காலை 07.15 மணியளவில் லுனுகலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வாகனத்திற்கு இடமளித்தபோது , வீதியில் இருந்து விலகி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வண்டி சாரதி, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
டிப்பர் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.