நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் மே 31ம் மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் நீக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை ஜூன் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கும் என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எனவே பொதுமக்கள் பயணத்தடை கட்டுப்பாடுகளை சரியான முறையில் பின்பற்றி வீடுகளில் இருக்குமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்