இன்றைய காலகட்டத்தில் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வெளி இடங்களில் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதற்கே பயப்படும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ள திருக்கோவிலூரில் பால் வியாபார முகவர் ஒருவர், வாடிக்கையாளருக்கு கொடுத்த பால் பாக்கெட்டை பிரித்துப் பார்த்த போது, அதில் தவளை ஒன்று இருந்த நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே அமைந்துள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது அதை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே தவளை இருப்பதைப் கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம குறித்து விழுப்புரம் ஆவின் பால் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் குறிப்பிட்ட நபர் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலங்களாக இவ்வாறு உணவுப் பொருட்களில் அருவருக்கத்தக்க பொருட்கள் காணப்படுவதை நாம் அடிக்கடி காணமுடிகிறது.