இலங்கையில் 65 லட்சம் பேஸ்புக் பயனாளிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதில், 21 லட்சம் பேர் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதேநேரம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் ப்ரோட்பேன்ட் இணைப்பை வழங்குவதற்கும் செயற்பட்டு வருவதாக ஓஷத சேனநாயக்க தெரிவித்தார்.
கிடைக்கும் சிறப்பு அம்சத்தைப் பெற்ற 29 வது நாடாக இலங்கை திகழவுள்ளது. இதற்கமைய சிறப்பு அம்சத்துடன் நாடு முழுவதும் இருபத்தி நான்கு இரத்த வங்கிகள் இணைக்கப்படுகின்றன.18-55 வயதுக்குட்பட்ட பேஸ்புக் பயனர்கள் அருகிலுள்ள இரத்த மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் பதிவு செய்து இரத்தத் தேவைகள் குறித்த புதுப்பிப்புகளைப்பெறக்கூடியதாக இருக்கும்.
இரத்த தானம் செய்ய அதிகமானவர்களை ஊக்குவிப்பதற்கும், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சிறப்பு பேஸ்புக் இரத்ததான அம்சம் ஆரம்பிக்கப்படுகிறது.