அறம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மத்தொனி,கரவெட்டி தெற்கு பகுதியில் வாழும் வறுமைக்கோட்டிற்கு கிழ்ப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இவ் நிகழ்விற்கு கிராம சேவையாளர் திரு.க.புலேந்திரா,மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு பல சமூக சேவைகளில் மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தினர் ஈடுபட்டு வருவதனை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.