தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.00 மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேருந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.