Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்யாழ்ப்பாணம்

மலையகத்தை சேர்ந்த இருவர் பருத்தித்துறையில் மரணம்

மலையகத்தை சேர்ந்த இருவர் பருத்தித்துறையில் மரணம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் மலையகத்தை சேர்ந்த இருவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் – பருத்தித்துறை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று(02) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்துக்கு நேரில் சென்ற பருத்தித்துறை நீதவான், அங்கு விசாரணைகளில் ஈடுபட்டார்.

இதே வேளை தடயவியல் பொலிஸாரும் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment