யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்யும் ஆசையில் இருந்த சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் கனவில் மண்ணைப் போட்ட புறோக்கரை ஆள் வைத்து அடித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (07) யாழ் – விலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதாவது, சுவிஸில் வசிக்கும் 32 வயதான யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை திருமணம் செய்துகொள்ள ஆசையாக இருந்துள்ளார்.
இதன்போது புறோக்கர் ஒருவர் இந்த திருமணத்தை நிறுத்தியதால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கொட்டனால் தாக்கப்பட்ட நிலையில் புறோக்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் முழு விபரம் இதுவரையில் தெரியவரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.