வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் அனைத்தும் உண்மைக்கு புரம்பானது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
போலி விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டு பலர் நிதிமோசடியில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ் விளம்பரங்கள் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரமே வெளியிடப்படும் என்றும்,
இவ்வாறு வெளியிடப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்பி செயற்பட வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.