வைப்பாளர்களின் பணத்தை பாதுகாக்க இலங்கை வங்கிகள் சங்கத்தின் வேலைத்திட்டம்
வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கையை (Parate Law) மேற்கொண்டு வருவதாக இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான இறுதித் தெரிவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
வைப்புத்தொகையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடனாளிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அறியத்தருகையில்,
வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களிடமிருந்து கடன்களை வசூலிப்பதற்காக ‘பரேட்’ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கிகள் சங்கம், வங்கிகள் சில சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 48 மாதங்களுக்கும் மேலாக நீட்டித்து, கடனைத் திரும்பப் பெறுவதற்கும், கடனாளிகள் வேண்டுமென்றே தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாத சந்தர்ப்பங்களில் கடன் இழப்புகளைக் குறைக்க அவர்களின் வைப்பாளர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கும் வங்கிகளுக்கு கடமை உள்ளது.
கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பணம் வைப்பாளர்களால் வங்கியில் வைப்புச் செய்யப்படுவதாகவும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியில் இருந்து வைப்பாளர்களுக்கு வட்டி செலுத்தப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
வைப்பாளர்களின் நம்பிக்கைச் சிதைவைத் தவிர்ப்பதற்காக இந்த பாத்திரத்தை மிகவும் கவனமாக நிர்வகிப்பதற்கு வங்கிகள் பொறுப்பு.
அத்துடன், அந்த நம்பிக்கையை உடைத்தால், பல எதிர்மறையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” இலங்கை வங்கிகள் சங்கமகுறிப்பிட்டுள்ளது.