Welcome to Jettamil

கஞ்சா தோட்டம் வனவிலங்கு அதிகாரிகளால் சுற்றிவளைப்பு

Share

கஞ்சா தோட்டம் வனவிலங்கு அதிகாரிகளால் சுற்றிவளைப்பு

சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் அதிரடியாகச் சுற்றிவளைத்துள்ளனர்.

உடவலவே தேசிய பூங்காவின் வெஹெரமங்கட மற்றும் ஹந்தகிரிய ஆகிய பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகளால் விசேட கூட்டு ரோந்துப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, பூங்காவிற்குள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கஞ்சா பயிர்ச்செய்கை கண்டுபிடிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின் போது கஞ்சா தோட்டத்துடன் சேர்த்து, ஒரு சட்டவிரோத துப்பாக்கியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தோட்டம் அதிகாரிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட சான்றுப் பொருட்களுடன் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் நான்கு பேருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை