Welcome to Jettamil

விஜய் ஒரு சைலண்ட் கில்லர் – தமிழக முதல்வர் விஜய்யை புகழ்ந்த நடிகை த்ரிஷா

Share

விஜய் ஒரு சைலண்ட் கில்லர் – தமிழக முதல்வர் விஜய்யை புகழ்ந்த நடிகை த்ரிஷா

தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் குறித்து, அவரது திரைத்துறைத் தோழியும் பிரபல நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணன் புகழ்ந்து பேசிய பழைய நேர்காணல் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

விஜய் தீவிர அரசியலில் இறங்கிப் பிஸியாக இருப்பதற்கு முன்னர், சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தபோது த்ரிஷா, சிம்ரன், சமந்தா, சங்கவி உள்ளிட்ட பல நடிகைகள் அவருடன் இணைந்து நடித்துள்ளனர். இதில் விஜய்க்கு மிகவும் ‘ராசியான ஜோடி’ யார் என்பதில் சிம்ரன் மற்றும் த்ரிஷா ரசிகர்களிடையே இணையத்தில் எப்போதும் ஒரு பெரிய விவாதமே நடப்பதுண்டு.

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி அவரைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த த்ரிஷா, விஜய்யை ‘சார்மர்’ (Charmer – வசீகரமானவர்) என்று வர்ணித்தார். “அவரிடம் எப்போதும் ஒரு அமைதியான ஈர்ப்பு (Silent Charm) இருக்கும்” என்று த்ரிஷா கூறினார்.

அப்போது நேர்காணல் செய்தவர், “அப்படியென்றால் அவர் ஒரு ‘சைலண்ட் கில்லர்’ (Silent Killer) தானா?” என்று கேட்க, அதற்குச் சிரித்துக்கொண்டே உடன்பட்ட த்ரிஷா, “ஆமாம், அவர் ஒரு சைலண்ட் கில்லர் தான். அவர் அதிகமாகப் பேசத் தேவையில்லை; அவரிடம் விவரிக்க முடியாத ஒரு மர்மமான ஈர்ப்பு (Mysterious Charm) இருக்கும்” என்று விஜய்யின் குணாதிசயம் குறித்துப் பாராட்டிப் பேசியிருந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை