Welcome to Jettamil

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்

Share

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், புதிய திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகத் திரையுலகில் கால்பதிக்கிறார்.

‘ஜென்டில்மேன்’ முதல் பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஷங்கரின் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனினும், அடுத்து அவர் ‘வேள்பாரி’ புதினத்தை மையமாகக் கொண்டு புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அவரது குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு நடிகராக சினிமாவுக்குள் நுழைகிறார்.

ஏற்கனவே ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துப் பிரபலமானார்.

மூத்த மகள் ஐஸ்வர்யா திரையுலகிற்கு வராமல் ஒதுங்கியிருக்கும் நிலையில், தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார்.

பிரம்மாண்ட இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஒருவர் இயக்கும் புதிய திரைப்படத்தில்தான் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாகப் பிரபல தென்னிந்திய நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வப் படப்பூஜை அண்மையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

தற்போது இந்தத் திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படங்கள் மற்றும் அர்ஜித்தின் தோற்றம் இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை