Welcome to Jettamil

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழில் வழக்கு!

Share

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழில் வழக்கு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக ‘நிகழ்நிலை காப்புச் சட்டத்தின்’ (Online Safety Act) கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (02.04.2026) வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான வைத்தியர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவரையும் கட்டாயம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

அண்மைக்காலமாகச் சமூக வலைத்தளங்கள் ஊடாக அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, புதிய நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை