Welcome to Jettamil

11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்! – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Share

11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்! – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற முறையில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு வைத்திய நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நேரத்தில் சூரியக்கதிர்கள் நேரடியாகத் தாக்குவதால் தசைப்பிடிப்பு, அதீத சோர்வு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பக்கவாதம் (Heat Stroke) ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுகாதார அமைச்சின் சமூக விசேட வைத்திய நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு வெப்பத்தினால் உடல்நிலை மோசமடைந்து உயிரிழப்பு கூட ஏற்படலாம் என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

வெளியில் பணிபுரியும் விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் அதிகளவில் நீர் அருந்துவதுடன், மதுபானம், கோப்பி மற்றும் அதிக இனிப்புள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளநீர், தேசிக்காய்சாறு, தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது சிறந்தது என வைத்தியர் சந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.

மெல்லிய நிறமுடைய பருத்தி ஆடைகளை அணியுமாறும், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பியைப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த வெப்ப அலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விசேட கவனம் செலுத்த வேண்டும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை