Welcome to Jettamil

13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா!

Share

 13 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தையை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் தாயார் முல்லைத்தீவில் வசிக்கிறார். மகளின் கல்விக்காக ஆனைக்கோட்டையில் வசிக்கும் தனது இளைய சகோதரியின் பாதுகாப்பில் மகளை விட்டுள்ளார்.

சிறிய தந்தையால் சிறுமி நேற்று வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சம்பவ தொடர்பில் சிறுமியின் சிறிய தாயார் தனது கணவருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு வழங்கினார்.

அதனடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேக நபர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை