Welcome to Jettamil

2020 க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட ஏற்பாடு..!

Share

2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக இம்முறை விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக பரீட்சை அனுமதி அட்டையில் காணப்படும் குறைபாடுகளை https://www.doenets.lk/ எனும் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவே ஒரு வாரத்திற்குள் இந்த திருத்தங்களை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை