Welcome to Jettamil

யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் 76ஆவது குடியரசு தின நிகழ்வு!

76th Republic Day celebration at the Indian Consulate in Jaffna!

Share

யாழ். இந்திய துணைத் தூதரகத்தில் 76ஆவது குடியரசு தின நிகழ்வு!

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

76th Republic Day celebration at the Indian Consulate in Jaffna!

யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றதுடன், இந்திய தேசிய கொடியும் தூதுவரால் ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குடியரசு தின வாழ்த்து செய்தி யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மூலம் வாசிக்கப்பட்டது. பின்னர் இந்திய தேசபக்திப் பாடல்கள், நடனங்கள் மற்றும் கவிதைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள், ஊடகவியாளர்கள், பொலிஸாரும், இராணுவத்தினரும் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை