வாழைச்சேனை வௌ்ளத்தில் இருவர் மாயம்
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் வாழைச்சேனையில் காணாமல் போயுள்ளனர்.
வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை வெள்ளத்தின் காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே காணாமல் போயுள்ளனர்.
இந்த இருவரும் காய்கறிகளை சேகரித்து, வயல்களில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது புலிப்பாஞ்சிக்கல் ஓயாவின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.