மோட்டார் சைக்கிள் திருடினார் என்ற குற்றச்சாட்டில் 78 வயதுடைய நபர் அரலகங்வில பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைதுசெய்யப்பட்ட பொழுது அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த சந்தேக நபரால் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு, பல்வேறு இடங்களில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தாக அவர் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வாங்கிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.