Welcome to Jettamil

பேரனர்த்த நிவாரணப் பணிகள்: அரசியல் அழுத்தம் இல்லை! – குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமைச்சர்!

Share

பேரனர்த்த நிவாரணப் பணிகள்: அரசியல் அழுத்தம் இல்லை! – குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமைச்சர்!

நாட்டில் நிலவிய பேரனர்த்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் அரச அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பின்வரும் முக்கிய கருத்துகளை வெளியிட்டார்:

“அரச அதிகாரிகளுக்கு அரச தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரச ஊழியர்களுக்குச் சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.”

“சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற நிதி முறையாகப் பயன்படுத்தப்படாததால் சர்வதேசம் நம்பிக்கை இழந்திருந்தது. ஆனால், தற்போதைய எமது நிர்வாகப் பொறிமுறை மீது சர்வதேசத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.”

“தேசிய மக்கள் சக்தி அரசுக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது சிறப்பான முறையில் சர்வதேச உறவு பேணப்பட்டு வருகின்றது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரிடர் நிவாரணப் பணிகள் வெளிப்படையாகவும், அரசியல் தலையீடுகள் இன்றியும் நடைபெறுவதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை