Welcome to Jettamil

காதலிகளுக்குப் பரிசளிக்கத் திருட்டு: 61 மாணிக்கக் கற்களுடன் 18 வயது இளைஞன் கைது!

Share

காதலிகளுக்குப் பரிசளிக்கத் திருட்டு: 61 மாணிக்கக் கற்களுடன் 18 வயது இளைஞன் கைது!

தனது காதலிகளுக்குப் பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சிறப்பங்காடி ஒன்றில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து, தனது உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து திருடப்பட்ட 61 மாணிக்கக் கற்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடிய பணத்தில், 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான தனது காதலி ஒருவருக்கும், டிக்டோக் (TikTok) ஊடாக அறிமுகமான வேறு இரண்டு காதலிகளுக்கும் அவர் கையடக்கத் தொலைபேசிகளை வாங்கிக் கொடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை