தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: 67 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேற்றம்!
தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர், தற்போது மீண்டும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலை காரணமாக, குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டு மண்சரிவு அபாயம் தோன்றியது. இதனால் பாதுகாப்பு கருதி மக்கள் கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேற்கொண்ட ஆய்வில், தற்போது பெரிய அளவிலான அபாயங்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகாம் காலி: பாடசாலைகள் நாளை (05) ஆரம்பமாக உள்ள நிலையில், இன்று (04) மக்கள் அனைவரும் பாடசாலையிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.





