Welcome to Jettamil

செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!

Share

செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இதேவேளை, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் எட்டு பிரதிநிதிகள் கொண்ட தூதுக்குழு, இன்று (22.07.2026) செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டது.

இதற்காக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து தூதுக்குழுவினர் அகழ்வுப் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இந்தக் குழுவில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மனி தூதுவர் டாக்டர் பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலி தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், இதுவரை அகழ்வாய்வில் 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், இந்த விடயத்தில் வெளிப்படையான மற்றும் சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான அகழ்வாய்வுப் பணிகளும், மேலதிக விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை