Welcome to Jettamil

ஜே.வி.பி-க்கு ஏற்ற சீர்திருத்தம் நாட்டிற்குப் பொருந்தாது! ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச கடும் எச்சரிக்கை

Share

ஜே.வி.பி-க்கு ஏற்ற சீர்திருத்தம் நாட்டிற்குப் பொருந்தாது! ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச கடும் எச்சரிக்கை

அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை நாட்டிற்குப் பொருந்தாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய நாமல், “கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டிற்கு ஒவ்வாதவை என்பதைத் தெரிந்தும், அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் பிடிவாதம் காட்டுகிறது,” எனச் சாடினார்.

நாட்டின் கல்வி முறையிலும், அரச பொறிமுறையிலும் மாற்றங்கள் தேவை என்பதைத் தானும் தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அந்த மாற்றங்கள் தேசத்தின் கலாசாரம் மற்றும் மத விழுமியங்களைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கல்விச் சீர்திருத்தங்கள் ஜே.வி.பி-யினரின் தேவைக்காக அல்லாமல், மாணவர்களின் எதிர்காலத் தேவைக்காக இருக்க வேண்டும். அகங்காரத்துடன் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் நற்பெயரைத் தராது,” என அவர் எச்சரித்தார்.

கல்வி முறைக்கு ஒவ்வாத மாற்றங்களை வலுக்கட்டாயமாகப் புகுத்துவதால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை