நெஞ்செரிச்சல், அல்சர் பிரச்சினையா? மாத்திரை இல்லாமலேயே குணமாக்கலாம்! இயற்கை மருத்துவர் தரும் தீர்வு!
இன்றைய அவசர உலகில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், மன அழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோய் தான் அல்சர் (Ulcer) எனப்படும் வயிற்றுப்புண்.
இதற்கான காரணங்கள் மற்றும் எளிய இயற்கை மருத்துவத் தீர்வுகளை விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் எமி.
கோபம், பதற்றம், தூக்கமின்மை, சரியான நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பது மற்றும் பல நாட்கள் ஃபிரிட்ஜில் (Fridge) வைக்கப்பட்ட மாவு, காய்கறிகளைப் பயன்படுத்துவதால் வயிற்றின் ஜீரணத்தன்மை கெடுகிறது. இதனால் வயிற்றில் ஆசிட் (Acid) சுரப்பு அதிகரித்து குடல் புண்ணாக மாறுகிறது.
அல்சர் பிரச்சினையிலிருந்து முழுமையாக விடுபட, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி சாறு (White Pumpkin Juice) அல்லது சுரைக்காய் சாறு குடித்து வரலாம். மேலும், முருங்கைக் கீரையை நன்றாக வேக வைத்து அரைத்து, அதனுடன் தயிர் கலந்து சாப்பிடுவது வயிற்றுப் புண்ணை உடனடியாக ஆற்றும்.
பழங்களில் இருப்பது உடலுக்கு நன்மை தரும் நல்ல சர்க்கரை (Fructose) என்பதால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகப் பழங்களைச் சாப்பிடலாம். ஆனால், அவர்கள் பழங்களை ஜூஸாகக் (Juice) குடிப்பதைத் தவிர்த்து, அப்படியே மென்று சாப்பிடுவது மட்டுமே பாதுகாப்பானது.
குறிப்பாக கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் முழுமையாகச் சுவாசிப்பதில்லை. இதனால் உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் (Oxygen) அளவு குறைந்து, உடல் சோர்வடைகிறது. தினமும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி (Pranayama) செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி, உடலின் உயிர் சக்தி அதிகரித்து நீண்ட ஆயுள் கிடைக்கும்!





