Welcome to Jettamil

கொல்லப்பட்ட ஈரானியத் தளபதி அலி முகமது நைனிக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி.

Share

கொல்லப்பட்ட ஈரானியத் தளபதி அலி முகமது நைனிக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் மூத்த செய்தித் தொடர்பாளரும், பிரிகேடியர் ஜெனரலுமான அலி முகமது நைனியின் இறுதிச்சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (21) உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றன.

பாரசீகப் புத்தாண்டு மற்றும் ஈதுல் பித்ர் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

68 வயதான அலி முகமது நைனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய நள்ளிரவுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை IRGC உறுதிப்படுத்தியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் படுகொலை செய்யப்பட்ட மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடலுக்கு இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலானது மத்திய கிழக்கில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமது உயர் அதிகாரிகளின் இழப்புகளுக்கு ஈரான் கடுமையான முறையில் பழிவாங்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது.

இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஆவேசமான கோஷங்களை எழுப்பியதுடன், இந்தப் படுகொலைக்குப் பதிலடி கொடுக்கப்படும் என உறுதிபூண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை