இஸ்ரேலின் ஒரு முழு குடியிருப்புப் பகுதி தரைமட்டம் – “கடினமான இரவைக் கடக்கிறோம்” என நெதன்யாகு உருக்கம்!
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்கள் இன்று (22) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. தெற்கு இஸ்ரேலில் உள்ள அராட் (Arad) பகுதியை இலக்கு வைத்து ஏவப்பட்ட 450 கிலோகிராம் எடையுள்ள பிரம்மாண்ட ஏவுகணை ஒன்று, இஸ்ரேலின் இருமுறை இடைமறிக்கும் முயற்சிகளையும் முறியடித்து குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒரு முழு குடியிருப்புப் பகுதியே முற்றாக அழிந்துள்ளதாக இஸ்ரேலின் சேனல் 14 (Channel 14) ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை விழுந்ததில் பாரிய அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலின் வான் பாதுகாப்புத் தளவாடங்களால் இந்த ஏவுகணையைத் தடுக்க முடியாமல் போனமை இராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நமது எதிர்காலத்திற்கான போரில், நாம் மிகவும் கடினமான ஒரு இரவைக் கடந்து கொண்டிருக்கிறோம்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.





