Welcome to Jettamil

இளம் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கிணற்றில் வீசிய தம்பதியினர் கைது

Share

இளம் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து கிணற்றில் வீசிய தம்பதியினர் கைது

மட்டக்களப்பு தாந்தாமலை – நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை குழந்தையுடன் மட்டக்களப்பு நகருக்குச் சென்ற இளம் தாயை, குறைந்த வாடகைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி முச்சக்கரவண்டியில் ஏற்றிய இக்கும்பல், மயக்க மருந்து கலந்த பழச்சாற்றைக் கொடுத்துள்ளது.

குறித்த தாய் மயக்கமடைந்ததும், அவரது 6 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள், 2 ½ வயது குழந்தையை வயல் பகுதியில் வீசி எறிந்துவிட்டு, மயக்க நிலையில் இருந்த தாயைத் தாந்தாமலை பகுதியிலுள்ள கிணற்றுக்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையில், வந்தாறுமூலையைச் சேர்ந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியா, அவரது கணவர் சதீஸ்வரன் மற்றும் தம்பி தனோஜன் ஆகியோர் வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணையும் இதே பாணியில் மயக்க மருந்து கொடுத்து, ஆபரணங்களைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசியதைச் சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை