Welcome to Jettamil

ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை நிறுத்தவும் – டிரம்ப் க்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை

Share

ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை நிறுத்தவும் – டிரம்ப் க்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை

ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்களைப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பேசிய அவர், “இது ஒன்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; மக்களின் உயிர் மற்றும் அமைதி சம்பந்தப்பட்ட விடயம்” எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது போரைத் தீர்ப்பதற்கான தீவிரமான அணுகுமுறை அல்ல என்றும், சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்றும் அவர் ட்ரம்ப்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளை “காகிதப் புலிகள்” என ட்ரம்ப் விமர்சித்ததற்குப் பதிலளித்த மக்ரோன், ஒரு கூட்டணியின் பலம் பரஸ்பர நம்பிக்கையில் உள்ளதே தவிர, நாளாந்தம் விமர்சனம் செய்வதில் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

ஹோர்முஸ் நீரிணையை இராணுவ ரீதியாக மீட்பது என்பது யதார்த்தமற்றது என்றும், அது ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மனைவி பிரிகிட்டே குறித்து ட்ரம்ப் வெளியிட்ட கேலியான கருத்துக்கள் கண்ணியமானவை அல்ல எனத் தெரிவித்த மக்ரோன், அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனப் புறக்கணித்தார்.

இருப்பினும், பிரான்ஸில் உள்ள மக்ரோனின் அரசியல் எதிரிகள் கூட ட்ரம்ப்பின் இந்தத் தனிப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாங்களாகவே முடிவெடுத்துவிட்டு, தற்போது ஏனைய நாடுகள் உதவவில்லை எனப் புலம்புவதில் நியாயமில்லை என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அவர் சாடியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை