தனது கடின உழைப்பால் உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் திடீர் மரணம்
யாழ்ப்பாணம் – இணுவிலைச் சேர்ந்த 19 வயதான லவன் அக்சயன் எனும் மாணவன் இன்று (04.04.2026) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், அண்மையில் வெளியான 2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்திருந்தார்.
உயர்தரப் பரீட்சையில் யாழ். மாவட்ட ரீதியில் 24-வது இடத்தைப் பிடித்து, பல்கலைக்கழக மருத்துவப் படிப்பு அல்லது பொறியியல் துறைக்குத் தெரிவாகும் தகுதியைப் பெற்றிருந்த நிலையிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்சயன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது கடின உழைப்பால் வெற்றிக்கனியைத் தொட்ட சில நாட்களிலேயே அவர் மறைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





