Welcome to Jettamil

59 ஆவது தேசிய புத்தரிசி விழா கோலாகலம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பம்

Share

59 ஆவது தேசிய புத்தரிசி விழா கோலாகலம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பம்

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக, 59 ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது.

மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த விழாவின் போது, நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் தமது முதற்போக அறுவடையின் புத்தரிசியைப் புத்தபெருமானுக்கு மிகுந்த பக்தியுடன் அர்ப்பணித்தனர்.

எமது கலாசாரத்தின் உயிர்நாடியாக விவசாயம் திகழ்வதாக இதன்போது ஜனாதிபதி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதே தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என வலியுறுத்தினார்.

இதற்காக வலுவான தொலைநோக்குப் பார்வையும் முறையான வேலைத்திட்டங்களும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, நீண்டகாலமாக விவசாய மக்கள் எதிர்கொண்டு வரும் காணி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக, விவசாயிகளுக்குத் தெளிவான உறுதிப்பத்திரங்களை (Land Deeds) வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை