முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருதய அறுவை சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்!
மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை (Heart Surgery) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சையின் பின்னர் சில வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





