Welcome to Jettamil

பற்றி எரியும் லெபனான்! இலங்கை பெண் காயம்! 254 பேர் பலி

Share

பற்றி எரியும் லெபனான்! இலங்கை பெண் காயம்! 254 பேர் பலி

லெபனான் மீது நேற்று (08.04.2026) இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் உலகையே அதிரவைத்துள்ளன. இந்தச் சரமாரித் தாக்குதல்களில், இதுவரை 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 1,165-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பயங்கரத் தாக்குதலின் போது லெபனானில் தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தாக்குதலில் சிக்கிய அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பியதாகவும், தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் நலமாக இருப்பதாகவும் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்துத் தூதரகம் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை