Welcome to Jettamil

விமானப்படை வீரர்களால் திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையம்! அமைச்சரின் செயலால் நெகிழ்ந்த மக்கள்

Share

விமானப்படை வீரர்களால் திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையம்! அமைச்சரின் செயலால் நெகிழ்ந்த மக்கள்

மீளப் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை பிரதான பஸ் நிலையம் நேற்று மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

வழக்கமாக அரசியல்வாதிகள் அல்லது உயர் அதிகாரிகளே திரைச்சீலையை நீக்கி நினைவுக்கற்களைத் திறந்து வைப்பார்கள். ஆனால், அந்த மரபை உடைத்த அமைச்சர், பஸ் நிலையப் புனரமைப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்ட இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) வீரர்களை அழைத்தார்.

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் இந்தப் பஸ் நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகளை விமானப்படை வீரர்களே முன்னெடுத்திருந்தனர்.

அவர்களின் கடின உழைப்பை மதிக்கும் வகையில், அந்த வீரர்களின் கரங்களாலேயே நினைவுக்கல் திரைச்சீலையை அமைச்சர் திறக்கச் செய்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இந்த நிலையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சரின் இந்தச் செயல், களத்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகப் பார்க்கப்படுகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்தப் பஸ் நிலையம், தற்போது நவீன தகவல் மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளுடன் மிளிர்கின்றது.

அரசியல்வாதிகள் தற்பெருமை தேடிக்கொள்ளாமல், உண்மையான உழைப்பாளர்களை முன்நிறுத்தி இந்த நிகழ்வை நடத்திய விதம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை