முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்குக் கடைசி எச்சரிக்கை! நாளை (10) நிறைவடைகிறது காலக்கெடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (10.04.2026) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதன்முதலில் கோரப்பட்ட இந்த விபரங்கள், சுமார் 10 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மாதம் வழங்கப்பட்ட 14 நாள் காலக்கெடுவின் இறுதி எச்சரிக்கை இதுவென ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (Anti-Corruption Act) விதிமுறைகளுக்கு அமைய அவருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது





