Welcome to Jettamil

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற பலமான நாடுகள் இருக்கும்போது உலகை ஆள்வது இனிச் சாத்தியமில்லை – புடின் கருத்து

Share

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற பலமான நாடுகள் இருக்கும்போது உலகை ஆள்வது இனிச் சாத்தியமில்லை – புடின் கருத்து

பன்முனை உலகில் இனி மேலாதிக்க சக்திகளுக்கு இடமில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நேரடியாகச் சாடும் வகையில் அமைந்துள்ள இந்தச் செய்தி, உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற பலமான நாடுகள் இருக்கும்போது, உலகை ஆள்பவரைப் போலச் செயல்படுவது இனிச் சாத்தியமில்லை என்பதை அவர் மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ந்த அமெரிக்காவின் தனிப்பெரும் ஆதிக்கச் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் ஒரு நாடு மட்டும் தீர்மானிக்கும் காலம் முடிந்து, இனிப் பல அதிகார மையங்கள் இணைந்து செயல்படும் பல்முனை உலகமே நிலைக்கும் என அவர் கூறியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை