எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் மௌனம் கலைத்தார்!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மெலனியா ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நேற்று (09.04.2026) வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அவர், எப்ஸ்டீன் அல்லது அவரது உதவியாளர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் தனக்கு ஒருபோதும் நட்பு இருந்ததில்லை எனத் தெரிவித்தார்.
நியூயார்க் நகரின் பொதுவான விருந்து நிகழ்வுகளில் தானும் தனது கணவர் டொனால்ட் ட்ரம்ப்பும் பங்கேற்றிருக்கலாம் என்றும், ஆனால் அது எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட தொடர்பு இருப்பதைக் குறிக்காது என்றும் அவர் விளக்கமளித்தார்.
2002 ஆம் ஆண்டு மெலனியா அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் ஒன்றைக் கொண்டு இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், “நான் எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்ட நபர் அல்ல” என அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பான பொய்கள் முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கப் பகிரங்க விசாரணை (Public Inquiry) நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




