அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் வருகைதந்த ஈரான் பிரதிநிதிகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஈரானின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடுநிலை மத்தியஸ்தத்தின் கீழ் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுடனான நீண்டகால மோதல்களுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்காக வருகை தந்துள்ள போதிலும், ஈரான் சில கடும் முன் நிபந்தனைகளை விதித்துள்ளது.
குறிப்பாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைச் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே முழுமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




