ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் தாக்குதல்! – இஸ்ரேலிய தரைப்படை முகாம்களைக் குறிவைக்கும் ஹிஸ்புல்லா!
வடக்கு இஸ்ரேலின் எல்லையோர நகரமான ஸ்லோமியில் (Shlomi) நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலியப் படையினரைக் குறிவைத்து, ஆளில்லாத் தாக்குதல் விமானங்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.





