Welcome to Jettamil

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – விசிக கோரிக்கை

Share

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – விசிக கோரிக்கை

தமிழகச் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு, “ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என மிக முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார்.

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்குத் தமிழக அரசு ஒரு பலமான சக்தியாக இருக்க வேண்டும் என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசு முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கத் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை