Welcome to Jettamil

வெளிநாடு செல்ல ஆசை! – காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயைக் கொ*டூரமாகக் கொன்ற மகள்!

Share

வெளிநாடு செல்ல ஆசை! – காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயைக் கொ*டூரமாகக் கொன்ற மகள்!

அநுராதபுரம் திருப்பனை பகுதியில் வசித்து வந்த 65 வயதுடைய தாய் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொ*டூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாகப் திருப்பனை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த தாயின் 32 வயதுடைய இளைய மகளும், அவரது காதலனான 25 வயதுடைய இளைஞனும் சேர்ந்து இக்கொலையைச் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

கைதான இருவரையும் போலீசார் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த தாய் கடந்த 24 ஆண்டுகளாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடினமாக உழைத்துவிட்டு, அண்மையில்தான் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தாயிடம் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் விலைமதிப்பற்ற தங்க நகைகளை இந்த ஜோடி திட்டமிட்டுத் திருடியுள்ளது.

அந்தப் பணம் மற்றும் நகைகளை வைத்துக்கொண்டு இருவரும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகவும், அதற்குத் இடையூறாக இருந்ததால் தாயைக் கொலை செய்ததாகவும் சந்தேகநபர்கள் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை