முதலமைச்சர் விஜயை சந்தித்த இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர்! இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஸ்வரன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாடு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரு தரப்புக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாக்க இலங்கை உறுதியாக இருப்பதையும் பிரதி உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கதீஸ்வரன் முதலமைச்சர் விஜயிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





