Welcome to Jettamil

மீண்டும் புத்துயிர் பெறும் பழைய போகம்பரை சிறைச்சாலை!

போகம்பரை சிறை

Share

மீண்டும் புத்துயிர் பெறும் பழைய போகம்பரை சிறைச்சாலை!

இலங்கையின் பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகம் தொடர்பாக, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது!

பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு முழுமையான சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று (ஜூலை 08) வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படியே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, மீள உருவாக்கப்படும் பழைய போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பானது (Jurisdiction) முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதன் கொள்ளளவை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் தீவிரமடைந்தது.

முன்னதாக இந்த வளாகத்தை அருங்காட்சியகம் அல்லது சுற்றுலாத் தளமாக மாற்றத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போதைய அவசரத் தேவை கருதி மீண்டும் சிறையாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே காலி, மஹமோதர பகுதியிலும் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்கான வர்த்தமானியை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது!

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை